2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'மாம்பழம்' சிறுவர் கூத்தின் சதங்கை அணி விழா

Kogilavani   / 2012 ஜூலை 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

'மாம்பழம்' வடமோடி சிறுவர் கூத்தின் சதங்கை அணி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு, சீலாமுனை ஜெம்ஸ் வீதியில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக துண்கலைத்துறையின் ஏற்பாட்டில் நுண்கலைத்துறைத் தலைவர் சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன், அண்ணாவியார் சி.ஞானசேகரம், ஏட்டண்ணாவியார் செ.சிவநாயகம், பிற்பாட்டுக்காரர்களான வி.விஜேந்திரன், கே.நிலுசா, முகாமையாளர் வி.விஜேந்திரன், இணைப்பாளர் ச.துஷ்யந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ் விழாவில், கீரிமடு சித்திவிநாயகர் ஆலய ஜெகநாத குருக்கள் வழிபாடுகளை நடத்தி வைக்க அண்ணாவியார் சதங்கைகளை அணிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், கிராம மக்கள் மத்தியில் சதங்கை அணிவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சதங்கையணி விழா கூத்துக்கள் அரங்கேற்றப்படுவதற்கு முன் சம்பிரதாயமாக நடத்தப்படும் ஒரு சிறப்பான சடங்காகும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .