2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலை சாஹித்ய விழா கலைஞர்கள் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கலாசார மரபுரிமைகள் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச சாஹித்ய விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார பேரவை தலைவருமான திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மாவட்ட உதவி செயலாளர் திருமதி என்.முகுந்தன் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதன்போது சுயம்பு என்ற விஷேட மலர் வெளியிடப்பட்டதுடன் 5 மூத்த கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .