2025 நவம்பர் 22, சனிக்கிழமை

பாரம்பரிய அரங்கப்பொருட்களின் காட்சியும் அரங்க ஆற்றுகை நிகழ்வும்

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய அரங்கப்பொருட்களின் காட்சியும் பாரம்பரிய அரங்க ஆற்றுகையும்  இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு, மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி.கி.கோவிந்தராசா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்லைக்கழக கலை கலாசாரப்பீட பீடாதிபதி பேராசிரியர். மா.செல்வராசா, சுவாமி விபுலானந்;தர் அழகியற் கற்கை நிலைய பணிப்பாளர் கலாநிதி. க.பிரேம்குமார், கிழக்குப பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன், மாமாங்கப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர் த.அகிலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய நிகழ்வாக கண்டியரசன் (தென்மோடிக் கூத்து) நடைபெறவுள்ளதுடன், நாளை வியாழக்கிழமை மழைப்பழம் (வடமோடி சிறுவர் கூத்து), நகைச்சுவைக் கூத்து, சுவேதனன் வதை (வடமோடிக் கூத்து)  ஆகிய கூத்துக்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கண்டியரசன் (மீள் நிகழ்த்துகை) உலகநாச்சி (வடமோடிக் கூத்து), நொண்டி நாடகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X