2025 நவம்பர் 22, சனிக்கிழமை

யாழ்.தெல்லிப்பளை கலை இலக்கிய கழகத்தின் வெள்ளி விழா

Kogilavani   / 2012 ஜூலை 22 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             
(ஜெ.டானியல்)

யாழ்.தெல்லிப்பளை கலை இலக்கிய கழகத்தின் வெள்ளி விழா நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது.

முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் பி.விக்கினேஸ்வரன், கௌரவ விருந்தினர்களாக வலி வடக்கு பிரதேச செயலர் க.சிறிமோகன், ஓய்வு நிலை அதிபர் சி.அனந்தசயனன், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் ஆ.இராசேந்திரன், யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி எஸ்.விசாகரூபன் ஆகியோhர் கலந்துகொண்டனர்

வாழ்த்துரையை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் நிகழ்த்தினார்.  இதன்போது, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வெள்ளி விழா மலரும் சைவப் புலவர் சி.செல்லத்துரையின் சிவகாமி கவிதை நூல் வெளியீடும் இடம்பெற்றதுடன் ஐம்பது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.படங்கள்:-கிரிசன்





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X