2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நல்லூர் உற்சவத்தையொட்டி கலை நிகழ்வுகள்

Kogilavani   / 2012 ஜூலை 28 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்.நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை சிறப்பூட்டும் வகையில் ஆலயச் சூழலில் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் 'புலவர் போற்றிடும் புலவர்' என்னும் தலைப்பில்  இளஞ்சொற்பொழிவாளர்  நி.பகீரதனின்  சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது.

இதேவேளை,  வண்ணை ஸ்ரீ விஸ்வலிங்கம் மகா கணபதி மற்றும் இளவாலை சித்திரமேழி ஞானபைரவர் அறநெறிப் பாடசாலை மாணவிகளின்
கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நல்லூர் தெற்கு வீதியில் உள்ள துர்க்கா மணிமண்டபத்தில் மாலை 6.45 மணிமுதல் 7.45 மணிவரை பிரம்ம ஸ்ரீ விஸ்வ பிரசன்னாவின திருமுறைக்  கச்சேரி இடம்பெற்றது.

இதில் அணிசெய் கலைஞர்களாக ஜெயராமன், துரைராசா, செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .