2025 நவம்பர் 22, சனிக்கிழமை

'முதல் அடி' முழுநீளத் திரைப்பட தயாரிப்புப் பணி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 31 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியாவில் 'முதல் அடி' என்ற பெயரில் முழுநீளத் திரைப்படமொன்றை  தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் நேற்று தெரிவித்தார்.

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் திரைக்கலைமன்றம் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். 

வவுனியாவை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் இயக்குநராக தமிழகத்தின்  பிரபல்யமான படப்பிடிப்பாளர்களிடம் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றுவரும் கே.எஸ்.பி.மோகனராஜ் கடமையாற்றுகின்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X