2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் ஒளவையார் விழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் ஒளவையார் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வவுனியா தமிழ்ச் சங்கத்தின்  தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 'கற்றது கை மண்ணளவு' என்ற தொனிப்பொருளில் தமிழ் புலவர்களை சித்தரிக்கும் வேடமணிந்து கோல உரையாடல் நடைபெற்றது. அத்துடன்,  கலை தெரி அரங்கத்தில் ஒளவையாரின் சமுதாய சிந்தனை தொடர்பில் கி.உதயகுமாரும்  கல்விச்சிந்தனை தொடர்பில் ந.பார்த்தீபனும் ஆன்மீகச்சிந்தனை தொடர்பில் திருமதி வி.முருகேசம்பிள்ளையும் மருத்துவச் சிந்தனை தொடர்பில் ச.க.தியாகலிங்கமும் பெண்ணியம் தொடர்பில் திருமதி த.நிறைமதியும் கருத்துக்களை வழங்கினர்.

இதனையடுத்து நாட்டியக்கலை மாமணி துஸ்யந்தி வேலுப்பிளையின் பாரத சேஸ்த்திர மாணவிகள்; நல்ல தமிழ் காண்போம் என்ற தொனிப்பொருளில் நாட்டியத்தினையும் அரங்கேற்றினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .