2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருதுக்கு 'துயரக்கடல்' கவிதை நூல் தெரிவு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே,பிரசாத்)

யாழ். இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த 2012ஆம் ஆண்டுக்கான விருதுக்கு முல்லைத்தீவைச் சேர்ந்த கி.பி.நிதுன் எழுதிய 'துயரக்கடல்' கவிதை நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்று மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு மே மாதம் 'துயரக்கடல்' வன்னியிலிருந்து வெளியான முதல் நூலாகும். யுத்தம் இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பட்ட அவலங்கள், இழப்புக்கள், போருக்குப் பின்னரான முகாம் வாழ்கை, மீள்குடியேற்றம்  போன்ற பல்வேறு விடயங்கள் இக்கவிதை நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நூலுக்கான பணப்பரிசும் விருதும் எதிர்வரும் 04ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக யாழ். இலக்கிய வட்டம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .