2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இராவணேசன் நாடகத்தின் முன் காட்சி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் தயாரித்த, விசேட அழைப்பாளர்களுக்கான இராவணேசன் நாடகத்தின் முன் காட்சி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் நடைபெற்றது.

பேராசிரியர் சி.மௌனகுருவின் தயாரிப்பில் நடைபெற்ற இராவணேசனில் சுமார் 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொண்டனர். மட்டக்களப்பு ஆரங்க ஆய்வுகூடத்தினரின் முதல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சி.மௌனகுருவால் தயாரிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இராவணேசன் நாட்டுக்கூத்து பல தடவைகள் அரக்கேற்றப்பட்டுள்ள போதும், பேராசிரியர் சி.மௌனகுருவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தினால் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மு.கானா என அழைக்கப்படும் ஆரையம்பதியைச் சேர்ந்த கவிஞரும், நவீன கூத்துக்களின் உருவாக்கத்தில் முக்கியவராகக் கருதப்படும் மு.கணபதிப்பிள்ளை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, பிரபல வழக்கறிஞரான மங்களா உள்ளிட்டோரும் இன்னும் பெறுமளவான பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பேராசிரியரும் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தின் நிறுவுனருமான சி.மொளனகுரு இராவNணுசன் தொடர்பான அறிமுக உரையினை வழங்கியதை அடுத்து நாடகம் நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .