2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

Kogilavani   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக பண்பாட்டுப்பிரிவு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு பண்பாட்டு ஊர்வலமும் நடைபெற்றது.

இவ் ஊர்வலத்தில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் உட்பட கலாசார உத்தியோகத்தர்கள், இலக்கியவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

இந்த மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆய்வரங்குகள், ஓவியக் கண்காட்சி, கூத்து, நாடகம் உட்பட பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .