2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நிறைவு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக பண்பாட்டுப்பிரிவு நடத்திய கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று திங்கட்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகி நேற்று மாலை வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எம்.நேசராசா, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், நாடக நெறியாளர்களான கே.குருநாதன், சி.ஆறுமுகம் மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது,  குரங்குகளின் இராட்சியம், பிறந்த நாள் கொண்டாட்டம், மீட்பு போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .