2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வாசிப்பு மாதத்தையொட்டி கவிதை, சிறுகதை போட்டிகள்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (நவரத்தினம்)

தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி வாரத்தின் கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொதுநூலகம்  வாசகர்களிடையே கவிதை மற்றும் சிறுகதை போட்டிகளை நடத்தவுள்ளது.

வாசகர்களுக்கிடையில் அருகி வரும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், 15 தொடக்கம் 18 வயதுக்குட்பட்டோருக்கு 'வாசிக்க மறுப்பவன் யோசிக்க மறுக்கின்றான்' எனும் தலைப்பில் சிறுகதையும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 'எதிர்காலத்தில் வாசிப்பு' எனும் தலைப்பில் கவிதைப்போட்டியும் இடம்பெறவுள்ளது.

கவிதைப்பிரிவில் மரபுக் கவிதையாக இருப்பின் 20 வரிகளுக்கு குறையாமலும் புதுக் கவிதையாயின் 40 வரிகளுக்கு குறையாமலும் இருப்பதுடன் அனைத்து ஆக்கங்களையும் நூலகர், பொது நூலகம், நகரசபை, வவுனியா எனும் முகவரிக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க தக்கவகையில் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது

இதேவேளை பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கதை சொல்லும் மற்றும் பாடல் போட்டி நிகழ்வுகளும் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .