2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மிதிவெடி அபாயக் கல்வி பாதுகாப்பு நூல் விநியோகம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


யுனிசெப் அமைப்பின் நிதி அனுசரணையுடன் கல்வி அமைச்சும் தேசிய கல்வி நிறுவகமும் இணைந்து மிதிவெடி அபாயக் கல்விப் பாதுகாப்பிற்காக உருவாக்கிய பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் விநியோகித்தல் நிகழ்வு மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் முகாமைத்துவ மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கல்வி அமைச்சின் உயரதிகாரிகளும் யுனிசெப் நிறுவன அதிகாரிகளும் இந்திகழ்வில் கலந்து பாடசாலைகளுக்கான இப்பாட நூல்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.
 
இப்பாடநூல் ஆனது தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான வகுப்புக்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக்கல்வியும் பாடத்தில் பாதுகாப்புத் தேர்ச்சி இல் இப்பாடப்பரப்பு உள்ளடக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .