2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருமலையில் கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சு, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய கலை இலக்கிய விழாவும், விருது வழங்கல் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம, கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, மாகாண சபை பேரவையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பத்தி, பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் மற்றும் பிரதம செயலாளர், திணைக்களச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

2011ஆம் ஆண்டடில் வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புக்களில் சிறந்தவற்றிற்கான பரிசுகளும் 2012இல் இலக்கியத்துறையில் சேவையாற்றிவர்களுக்கான முதலமைச்சர் விருதுகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .