2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் தயாரிக்கப்பட்ட 'என்னுள் என்ன மாற்றமோ' முழு நீள திரைப்படம் விரைவில் வெளியீடு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


நம் நாட்டு கலைஞர்களின் திறமைகளும் ஆற்றல்களும் அழிந்து போகும் இக்காலத்தில் யாழில்  தயாரிக்கப்பட்ட நல்லூரான் பிக்சர்ஸ் வழங்கும் 'என்னுள் என்ன மாற்றமோ' முழு நீள திரைப்படத்தினை வெகு விரைவில் வெளியிடுவதற்கு திரைப்பட குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இத் திரைப்பட தயாரிப்பாளர் குழு இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின் போது திரைப்பட தயாரிப்பாளர் எ.கவிமாரன் தெரிவிக்கையில், பலத்த சவால்களின் மத்தியில் இத்திரைப்படத்தினை தான் தயாரித்துள்ளதாக தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் 4ஆம் வருட மாணவனாக கற்றுக் கொண்டிருப்பதுடன், எதிர்காலத்தில் எமது சமுதாயத்தினரிடையே ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக 'என்னுள் என்ன மாற்றமோ' என்னும் திரைப்படத்தினை தயாரிக்க எண்ணியதாக அவர் தெரிவித்தார்.

இந்திய திரைப்படத்தினை கண்விழித்து பார்க்கும் எம்மவர்கள் எமது நாட்டில் வெளியிடப்படும் குறுந் திரைப்படங்கள், முழு நீள திரைப்படங்கள் மூலம் எமது கலைஞர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றார்கள்..

நல்லுரான் பிக்சர்ஸ் வழங்கும் 'என்னுள் என்ன மாற்றமோ' திரைப்படத்தினை எமது மக்கள் வரவேற்க வேண்டுமென்று திரைப்பட இயக்குநர் குழு எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.

ஈழத்தின் பெருமை சேர்க்கும் விதமாக 4 பாடல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியிடுவதற்கு திரைப்பட குழுவினர் முன் வந்துள்ளனர்.

இத் திரைப்படத்தினை வெளியிடுவதற்கு லாப நோக்கத்தினை கருதாத திரைப்பட குழுவினர், இன்னல்களின் மத்தியிலும், சவால்களின் மத்தியிலும் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் மூலம்  மக்களின் வரவேற்பை எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.

இக்கலந்துரையாடலில், திரைப்பட இயக்குநர், உதவி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .