2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மருதமுனையின் வரலாறு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனை பிரதேச செயலாளரான மருதமுனை முஹம்மது தம்பி முஹம்மது நௌபல் எழுதிய மருதமுனையின் வரலாறு (ஆள்சார் கண்ணோட்டம்) பாகம் 2 நூல் வெளியீடும்; பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய சட்டங்கள், நூல் தெரிவுபடுத்தும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கவிஞர் எம்.பி.அபுல்ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் நூலின் முதல் பிரதி, நூலாசிரியர் முஹம்மது தம்பி முஹம்மது நௌபலினால் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரீ.எல்.ஏ.மனாப்புக்கு வழங்கப்பட்டது.

இதில் ஓட்டமாவடி பிரதேசசெயலாளர் எம்.சீ.அன்சார், சட்டத்தரணிகளான ஏ.எம்.றக்கீப், அன்சார் மௌலானா, கவிஞர் ஏ.எம்.றிபாஸ் உட்பட எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரச உயர் அதிகாரிகள், கல்வியியலாளர்கள் சமூக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .