2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இளைஞர் விருது விழா

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்காக நடத்தப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான இளைஞர் விருது விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கல்லடி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இளைஞர் விவகாரத்திறன் அபிவிருத்தி அமைச்சர் டழஸ் அழகப்பெருமவின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இப்போட்டியை நடத்தியது.

மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பாட்டு அறிவிப்பு, இஸ்லாமிய கீதம், பேச்சு, கவிதை உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .