2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கலாசார விழாவும் 'வாகை' சிறப்பு மலர் வெளியீடும்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாகரை பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசார விழாவும் 'வாகை' சிறப்பு மலர் வெளியீடும்  வம்மிவிட்டுவான் வித்தியாலய சந்திரகாந்தன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேல்ட்விஷன் நிறுவன உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பீ.வின்சன், சமாதனத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் நிறுவனத் தலைவர் கே.நடேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கலாசார நிகழ்வை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு பிரதேச கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது  கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .