2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'முதுசம்' காண்பியல் கலை கண்காட்சி

Menaka Mookandi   / 2013 மார்ச் 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலைவட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தின் காண்பியல் கலை தொடர்பான அ.யேசுராஜாவின் தனிநபர் சேமிப்பு ஆவணங்கள் கண்காட்சி இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைத்துறை கட்டிடத்தொகுதியில் ஆரம்பமாகியது.

14ஆவது தடவையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியானது, இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் காண்பியல் கலை தொடர்பாக கடந்த 50 வருடங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு  உள்ளன.

காண்பியல் அழகியல் கலை தொடர்பாக, மருதனார்மடம் நுண்கலைப் பீடத்தில் நடமாடும் 3 மாத கண்காட்சி நடைபெறுகின்றது. ஹொங்ஹொங் நாட்டிலிருந்து ஆரம்பமாகி நடைபெறும் மேற்படி நடமாடும் காண்பியல் கலை அழகியல் கலைக் கண்காட்சியில், இலங்கையிலுள்ள காண்பியல் அழகியற் கலையுடன் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் தெரிவித்துள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .