2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்' நூல் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிவகருணாகரன்


'ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்' என்ற கவிதைத் தொகுதியின் அறிமுக நிகழவு நேற்று இமையாணன், உடுப்பிட்டி, வடமராட்சியில் இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை விரிவுரையாளரும் விமர்சகருமான கந்தையா சிறிகணேசனும் சாட்சியுரையை 'தவிர'  இதழின் ஆசிரியர் தானா விஷ்ணுவும் ஆற்றினர்.

நூலின் பிரதியை வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த க.ஆறுமுகம் என்பவருக்கு கவிஞரும் விமர்சகருமான நிலாந்தன் வழங்கினார்.

பதிலுரையை கருணாகரன் நிகழ்த்தினார். கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்வில கலந்துகொண்டனர்.
இது கருணாகரனின் ஐந்தாவது இலக்கிய வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது, உரையாற்றிய, தவிர இதழின் ஆசிரியர் தானா விஷ்ணு

'துயரத்தைக் கடப்பதற்காகவே மனித முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனாலும் மனிதர்களைச் சுற்றித் துயரமும் அவலமும் ஒரு சாபத்தைப் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அறிவும் நாகரீகமும் சட்டங்களும் விதிமுறைகளும் பல நன்மைகளைப் போதித்தாலும் குற்றங்களும் தண்டனையும் அநீதியும் நிராகரிப்புகளும் வன்முறையும் ஒதுக்கலும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. இதற்கு எல்லை எது? முடிவு எது?' என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .