2025 மே 09, வெள்ளிக்கிழமை

தமிழ் விழாவும் மூத்த எழுத்தாளர் கௌரவிப்பும்

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலையில் 2013ஆம் ஆண்டுக்கான தமிழ் விழாவும் மூத்த எழுத்தாளர் கௌரவிப்பும் இன்று சனிக்கிழமை காலை திருகோணமலை புனித மரியால் கல்லூரியின் கலை அரங்கில் இடம்பெற்றது.

திருகோணமலை இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் தில்லைநாதன் பவித்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டு மூத்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். 

சேனையூர் மத்திய கல்லூரி மாணவர்களின் சிந்து நடை, காத்தவராயன் கூத்து போன்ற பாரம்பரிய தமிழ் கலை நிகழ்வுகளும் குறுந்திரைப்பட  வெளியீடுகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X