2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வடமாகாண இலக்கிய விழா

Kogilavani   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்

வடமாகாண இலக்கிய விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் திங்கட்கிழமை (2) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாண இலக்கிய விழா கடந்த முதலாம் திகதி வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு இலக்கிய மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலமையில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், வடமாகாண பிரதம செயலாளர் ஆர்.விஜயலட்சுமி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், மன்னார், முல்லைத்தீவு பிரதேச செயலாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கலை மற்றும் கலாசார விடயங்களை பிரதிபளிக்கும் வகையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

கடந்த 40 வருடங்களாக கலைத்துறையில் அரும்பணியாற்றிய கலைஞர்கள் 20 பேர் ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .