2025 மே 08, வியாழக்கிழமை

'அம்மா' வீதி நாடகம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தையொட்டி நேற்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் 'அம்மா' என்ற வீதி நாடகம் நடத்தப்பட்டது.

மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் நெறியாழ்கையில் பிரதேச செயலக பட்டதாரிப் பயிலுனர்களால் இவ்வீதி நாடகம் நடித்துக்காட்டப்பட்டது.

சிறுவர்களை விட்டுத்து தாய்மார் வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் படும் துன்பங்கள், கொடுமைகளை தொனிபொருளாகக் கொண்டு இந்நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாளர்ஸ்   மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.சண்முகநாதன் மற்றும் மண்முனை மேற்கு  உதவிப் பிரதேச செயலாhளர் எஸ்.ராஜ்பாபு, வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா, மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X