2025 நவம்பர் 22, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட செலயகம் நடத்தும் பௌர்ணமி கலைவிழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட செலயகம் நடத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்திபூங்காவில் மாலை 6 மணிமுதல் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள பாரம்பரிய கலைகளை மேம்படுத்தும் நோக்கிலும் நகரத்தினை அண்டிவாழ்கின்ற இளம் தலைமுறையினருக்கு கலைகள் தொடர்பான அறிதலை ஏற்படுத்தவுமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இக்கலைவிழா நடத்தப்படவுள்ளது,

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரின் வழிநடத்தலில் இவ் விழாக்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

அந்த வகையில் முதலாவதாக நாளை வெள்ளிக்கிழமை மண்முனை மேற்கு பிரNதுச செயலகப்பிரினரின் ஏற்பாட்டில் கலை கலாசார அமைப்புக்களினை ஒன்றிணைத்து பௌர்ணமி கலைவிழா நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கிறார். அத்துடன், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X