2025 நவம்பர் 22, சனிக்கிழமை

ஹட்டனில் ஆறு புத்தகங்களின் விமர்சன அரங்கு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.சிவகருணாகரன்


பெருவெளி கலை இலக்கிய இயக்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் - கொட்டகலையில் எதிர்வரும் (23) சனிக்கிழமை முதற்தடவையாக குவர்ணிகா உட்பட ஏழு நூல்களுக்கான விமர்சன அரங்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 41 ஆவது இலக்கியச் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட குவர்ணிகா சிறப்பு மலருடன் மெலிஞ்சி முத்தன், ஓவியரும் கவிஞருமான றஸ்மி, திருமாவளவன், கிருஸ்ணமூர்த்தி, கருணாகரன் ஆகியோரின் ஆறு புத்தகங்களுக்கான அறிமுகமும் விமர்சனமும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளன.

கவிஞரும் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சு.முரளிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுதர்ம மகாராஜன், மொழிவரதன், சுரேஸ், கவிஞர்  பாலமுருகன் தவச்செல்வன், லெனின் மதிவானம் ஆகியோர் விமர்சன உரைகளை ஆற்றுகின்றனர்.

சிறப்புரையை சி.ரமேஸ் நிகழ்த்துகிறார். இந்த நிகழ்வுக்கு மலையகத்தைச் சேர்ந்த அனைத்துப்படைப்பாளிகள், எழுத்தாளர்களையும் தாம் அழைப்பதாக பெருவெளி கலை இலக்கிய இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X