2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமுதசாரன் அமுதுப்புலவரின் நான்காம் ஆண்டு நினைவு தினம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஈழத்து இலக்கியவாதியான அமுதசாரன் அமுதுப்புலவர் இலக்கிய கலாநிதி அடைக்கலமுத்துவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மகாஜன கல்லூரி மண்டபத்தில் தமிழ் சங்கத்தின் உபதலைவர் கலாபூஷணம் எதிர்மனசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் செல்வராசா செயலாளர், தபராசா கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் யோகராசா சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்சங்க ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அடைக்கலமுத்துவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலிஉரை நினைவுப் பேருரை என்பன நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .