2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பஞ்சபுராணத் தொகுப்பு நூல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்ஜன்

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பஞ்சபுராணத் தொகுப்பு' நூல் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை (5) பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்ரீ கதிரேசன் கோவில் மண்டபத்தில் இடம் பெறவிருக்கின்றது.

ஸ்ரீ கதிரேசன் கோவில் இணை நிர்வாக அறங்காவலர் முத்தையா ஸ்ரீகாந்தன் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில், முன்னாள் இந்துக் கலாசார அமைச்சர் பி.பி.தேவராஜ் பிரதம அதிதியாக வருகைதர உள்ளார்.

மேலும் ஆத்மஜோதி சமய சமூகநல மேம்பாட்டு அமையத்தின் தலைவர் செல்லையா பரசுராம், வைத்திய கலாநிதி ஏ. யோகானந்தன், நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர்
ஆ. ஸ்ரீஸ்கந்தராஜா, மல்லாந்தை ஸ்ரீ கருனாஹர விநாயகர் கோவில் அறங்காவலர்
மு. நமசிவாயம், நாவலப்பிட்டி இந்து மன்ற தலைவர் சு. ராஜேந்திரன், நாவலப்பிட்டி தமிழ்ச்சங்கத் தலைவர் ளு. ராஜசேகரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்விப் பணிப்பாளர்கள், கம்பளைக் கல்வி வலய அதிபர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், நாவலப்பிட்டியில் அமைந்துள்ள சமய சமூகநல அமைப்புக்களின் உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .