2025 நவம்பர் 22, சனிக்கிழமை

பவளக்கொடி வடமோடிக் கூத்து

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டு. மாவட்டத்தின் முனைக்காடு  நாகசக்தி கலைமன்றத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய கலையையும் முறைமைகளையும் வளர்க்கும் வகையில் சனிக்கிழமை (31) இரவு  பவளக்கொடி வடமோடிக் கூத்து அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பேராசிரியர் மௌனகுரு, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் ஜெயசங்கர் மற்றும் விரிவுரையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இக்கூத்தில் பங்கேற்ற கலைஞர்கள், அண்ணாவிமார்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

பாரம்பரிய முறைப்படி கூத்துக்களரி அமைக்கப்பட்டு தோரணமும் கட்டப்பட்டு இக்கூத்து இடம்பெற்றது.

கூத்து முடிவடைந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கூத்துக் கலைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்களின் வீடுகளுக்குகும் சென்று கூத்து ஆடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X