2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

குளக்கோட்டன் சமூகம் நூல் வெளியீடு

Kogilavani   / 2015 ஜனவரி 23 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்


கனகசபாபதி சரவணபவன் எழுதிய 'இது குளக்கோட்டன் சமூகம்' என்ற சமூக வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், எழுத்தாளர் இராஜதர்மராஜா நூலின் அறிமுகவுரையையும், சிரேஷ்ட சட்டதரணி தி.திருச்செந்தில்நாதன் விமர்சன உரையையும் ஆற்றினர்.


நூலின் முதல் பிரதியை கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திரக் குருக்களின் மகனிடம் கையளித்தார்.


இந்நிகழ்வில், சிரேஷ்ட சட்டதரணி ஆ.ஜெகசோதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X