Administrator / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமறைக் கலாமன்றத்தின் பொன்விழா ஆண்டை (1965 – 2015) முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் பொற்தூறல் எனும் மாதாந்த நிகழ்ச்சி தொடரின் இம்மாதத்துக்கான மாசித்திங்கள் பொற்தூறல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் தி.வேல்நம்பி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுக்கு திருமதி சிவதர்சிகா ஜெயானந்தன் இசைக்கச்சேரி செய்ததுடன், பக்க வாத்தியக் கலைஞர்களாக மிருதங்கம்; நல்லை க.கண்ணதாஸ், வயலின் செல்வி பிறிசில்லா ஜோர்ஜ் ஆகியோர் அணிசெய்தனர்.
கொக்குவில் கலாபவன மாணவிகளின் நடனமும் இந்நிகழ்வில் மேடையேற்றப்பற்றது.
13 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
3 hours ago