2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

தேவாஞ்சலி நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 06 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்

சித்திரசேனா கலாலயத்தினரின் தேவாஞ்சலி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கெயார் சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பெரும்பான்மையின மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்துள்ள சடங்குளைக்கொண்டதான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த நாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

கலை இயக்குனர் ஹேஷ்மா விக்னராஜாவின் நெறியாள்கையின் கீழ் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவான கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வினை பேராசிரியர் சி.மௌனகுரு வழிநடத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X