Sudharshini / 2015 மார்ச் 08 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
சம்பூர் கலைஞர்களின் கேட்காத குரல்கள் குறும்படத்தின் இறுவட்டு வெளியீடு, திருகோணமலை லயன்ஸ் கழக செயலாளர் க.திருச்செல்வம் தலைமையில் திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்றது.
கடந்த 09 வருடங்களாக அகதி முகாமில் வாழும் மக்களின் அவல வாழ்வை சித்தரிக்கும் வகையில், சம்பூர் எ.எஸ்.ஆர். ரதனின் கதை இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற ஊறுப்பினர் சுமந்திரன், கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சர் சி.தண்டாயதபாணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்;கம், மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன், நாகேஸ்வரன், உப்புவெளி பிரதேசசபை தலைவர் விஜேந்திரன,; உள்ளூராட்சி மன்ற துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


27 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
2 hours ago