Kogilavani / 2015 மார்ச் 11 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பண்பாட்டு விழா, கரைச்சி கூட்டுறவு சபையின் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில் வரவேற்பு நடனத்தை காவேரி கலாமன்றத்தினர் வழங்கியதுடன் வரவேற்புரையை கரைச்சி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன் நிகழ்த்தினார்.
இதேவேளை, 'கரைஎழில் 2014' நூலின் வெளியீட்டுரையை காவேரி கலாமன்ற இயக்குநர் கலாநிதி ரி.எஸ்.ஜோசுவா ஆற்றியதுடன் ஆய்வுரையை மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வழங்கினார்.
கலாநிதி ஆறு.திருமுருகனின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் சிறப்புரையும் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் கலை, பண்பாட்டுக்கு உயர் சேவையாற்றிய பெருமக்கள், கரைஎழில், உயர் கரைஎழில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிப்பு நிகழ்வில் இறுவெட்டு ஒலி நாடா கௌரவம், இசையமைப்பாளர்கள் கௌரவம், வாத்தியக் கலைஞர்கள் கௌரவம், பாடலாசிரியர்கள் கௌரவம், பாடகர்கள் கௌரவம் என்பன இடம்பெற்றன.
பண்டிதர் பரந்தாமனார் கவின்கலை கல்லூரியினரின் நாட்டிய நாடகம், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் புத்தாக்க நடனம், மகாதேவ ஆச்சிரம சைவச்சிறுவர் கவின்கலை மன்றத்தின் கோவலன் கண்ணகி நாடகம் ஆகியவையும் இதன்போது நடைபெற்றன.
தேசிய கலை இலக்கியப் போட்டி, பிரதேச மட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றியீற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் இறுதியில் வழங்கப்பட்டன.
பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு அலுவலர் மா.அருள்சந்திரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி அ.அற்புதராஜா, விவசாய பீடாதிபதி திருமதி சிவமதி சிவச்சந்திரன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ப.ஜெயராஜா, கலாநிதி ஆறுதிருமுருகன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன், கிளிநொச்சி உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமலராஜா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.



25 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
2 hours ago