2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

வள்ளுவர் விழா

Menaka Mookandi   / 2015 மார்ச் 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சிவகணேசன் புடவையகத்தின் ஆதரவில் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் வள்ளுவர் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் 5 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் யாழ்ப்பாண தமிழச் சங்கத்தின் துணைத்தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவருமாகிய பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் தமிழ் வணக்கத்தை ஊர்காவற்றுறை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.தயாபரன், வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி சாந்தினி அருளானந்தம், தொடக்கவுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் வழங்கவுள்ளார்கள்.

குறள் நீதி என்னும் பொருளில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந.விஜயசுந்தரம் உரையாற்றுவார். சுழலும் சொற்போர் நிகழ்வில் நடுவராக தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவருமாகிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் செயற்படவுள்ளார்.

 'இக்கால உலகுக்கு வள்ளுவம் பெரிதும் வலியுறுத்துவது ஒழுக்கம் அல்ல கடமையே' என்னும் விடயத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவரையாளர் கு.பாலசண்மகன், 'கடமை அல்ல மனிதாயமே' என்னும் விடயத்தில் மருத்துவ தொழில்நுட்பவியலாளர் லோ.துஷிகரன், 'மனிதாயம் அல்ல உலகியலே' என்னும் விடயத்தில் வடமாகாண தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கௌரி முகுந்தன், 'உலகியல் அல்ல ஒழுக்கமே' என்னும் விடயத்தில் முல்லைத்தீவு குழுழ முனை மகா வித்தியாலய ஆசிரியர் க.சந்திசேகர் ஆகியோர் உரையாற்றவுள்ளார்கள்.

பொன்சக்தி கலாலயா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நடன நிகழ்வு இடம்பெறவுள்ளது. நடனத்துக்கான நட்டுவாங்கத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் வழங்கவுள்ளார். நன்றியுரையை தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் ந.ஐங்கரன் வழங்குவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X