Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 18 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
அண்மையில் கலாபூஷணம் விருது பெற்ற எழுத்தாளர் கோப்பாய் சிவத்தைப் பாராட்டும் விழாவும் அவர் எழுதிய 'மாந்தர் மாண்பு' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும், நீர்வேலி, வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.
வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆசியுரைகளை நீர்வேலி ஆலயங்களின் பிரதம குருமார்களான ஆ.சந்திரசேகரக் குருக்கள், கு.தியாகராஜ குருக்கள், சா.சோமதேவ குருக்கள் ஆகியோர் ஆற்றினர்.
நூலின் வெளியீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பியும் மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் வழங்கினர்.
நிகழ்வின் வரவேற்புரையை புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி ஆசிரியர் கணேசானந்தன் வழங்கினார். வாழ்த்துரைகளை கோப்பாய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் து.அருள்ராஜ், நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் த.பரராஜசிங்கம் ஆகியோர் வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
50 minute ago
2 hours ago