2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

Princiya Dixci   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஷண்

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும், ஒன்றியத்தின் அ.நிக்ஸன் தலைமையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. 

இந்நிகழ்வில், ஊடகத்துறையில் 40 வருடங்களுக்கு மேல்  சேவையாற்றியுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

பத்திரிகைத்துறையில் 1964ஆம் ஆண்டு முதல் இன்று வரை பணியாற்றி வரும் 'சண்' என்று எல்லோராலும் அழைக்கப்படும் சின்னத்துரை சண்முகராஜா, சன்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தின் ஆலோசகராக கடமையாற்றி வரும் பரராஜசிங்கம் பாலசிங்கம் மற்றும் வீரகேசரி பத்திரிகையில் மண்டூர் நிருபராக 1964ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிகின்ற இளையதம்பி பாக்கியராஜா, மானிப்பாய் வீரகேசரி நிருபராக 1967ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் திகதியிலிருந்து கடமையாற்றி வரும் கந்தசாமி அரசரட்ணம், ஊடகத்துறையில் 1959ஆம் ஆண்டு முதல் கடமையாற்றும் கருப்பண்ணப்பிள்ளை பரமசிவம் மற்றும்; வீரகேசரி பத்திரிகையின் தலைமன்னார் நிருபராகக் 1976ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி வரும் கொன்சால்வாஸ் கூஞ்ஞே ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த 46 ஊடகவியலளார்களுக்கு ஊக்குவிப்பு உபகரண உதவிகளும் இதன்போது வழங்கப்பட்டன. சிறப்பு நிகழ்வாக முருகேஷ் குழுவினரின் இசைநிகழ்வும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கௌரவ விருந்தினர்களாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

'புதிய  ஊடகங்களின் வருகையும் பாரம்பரிய ஊடகங்களின் நிலையும்' என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை பேராசியர் சபா.ஜெயராஜா நிகழ்த்தினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X