Thipaan / 2015 மார்ச் 23 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
'அகர ஆயுதம்' எனும் இலக்கியச் சந்திப்புக்கும் உரையாடலுக்குமான பொது வெளி நடாத்திய, கவியரங்கும் உரையாடலும் நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது.
இந்நிகழ்வு, கலையன்பன் அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், பன்னூலாசிரியரும் ஆய்வாளருமான ஏபிஎம். இத்ரீஸ், சிரேஷ்ட இலக்கியவாதிகளான கவிஞர்கள் ஆசுகவி அன்புடீன், பாலமுனை பாறூக் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு கவி நயத்துடனான கருத்துப் பரிமாறல்களை வழங்கினர்.
இலக்கியவாதிகளும் கவிஞர்களும் கலைஞர்களும் இலக்கிய எழுச்சி, நகர்வுகள், அதன் கடந்த கால மற்றும் எதிர்கால போக்குகள் தொடர்பிலும் பல கருத்தாடல்களும் இலக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் கவிஞர் கிண்ணியா அமீர் அலியின் தலைமையில் பல்துறைக் கவிஞர்கள் பங்குபற்றிய கவியரங்கும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

29 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
2 hours ago