Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 28 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கலைகளை மீளப் புதுப்பிப்பதுக்குரிய சந்தர்ப்பமும் கலைஞர்களுக்குரிய அந்தஸ்தும் வழங்கப்படாமல் கலை உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. கலைஞர்கள் உலகில்; இயந்திரமயமாகி நிற்கின்றனர் என ஏறாவூர் கலாசாரப் பேரவையின் தலைவரும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளருமான எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்படும் வருடாந்த கலை இலக்கிய நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) இரவு ஏறாவூர் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
நான் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் ஏறாவூரின் பாரம்பரியங்கள், வழக்காடுகள். விருந்தோம்பல் பண்புகள், இனங்களுக்கிடையிலான சகவாழ்வையெல்லாம் தன்மையெல்லாம் அறிந்து நாங்கள் பெருமைப்பட்டிருக்கின்றோம்.
இங்கே வாழ்ந்து மறைந்த புலவர்கள், கலைஞர்கள், கவிஞர்களைப் பற்றியெல்லாம் வெளியூர்களிலும் வரலாறுகளிலும்; பேசப்பட்டிருக்கின்றன.
ஏறாவூர் நகரம் வரலாற்று ரீதியாக கலைப் பாரம்பரியங்களுக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள இன ஐக்கியத்துக்கும் பெயரெடுத்த ஒரு பகுதியாகும். இன்றும் கூட ஏறாவூரின் கலை மணம் மாறாமல் இருக்கின்றது.
நமது நாட்டின் ஆயிரம் ரூபாய் பணத்தாளில் இடம்பெற்றிருக்கின்ற யானைப் பணிக்கரும், கௌதம புத்தரின் தலதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட முதல் யானையும் ஏறாவூரைச் சேர்ந்தது என்பது இன்னமும் ஏறாவூரின் கலையம்சங்களுக்கு சிறந்த வரலாற்றுச் சான்றாய் அமைந்திருக்கின்றது.
எனினும், இன்றை நவீன போக்கு தாக்கம் செலுத்தியன் விளைவாக ஏறாவூரின் பெருமை மிகு கலாசாரம் மழுங்கடிக்கபபடுவதை எண்ணி வருத்தம் கொள்ள வேண்டியும் இருக்கின்றது.
தற்போது மறக்கப்பட்டு வருகின்ற எமது கலைகளைப் புதுப்பிக்க அதிகமான பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், கலையுணர்வுகளிலே ஒரு வித வறட்சி ஏற்பட்டு செழுமை குன்றியிருப்பதை எங்களால் உணரக்கூடியதாக உள்ளது.
கலைகளுக்காக நேரத்தை ஒதுக்குவது வீண் விரயம் என்று கருதுவது போல ஒரு போக்கு தற்போது உள்ளது. எவ்வாறாயினும் பாரம்பரியக் கலைகளைப் புதுப்பிப்பதுக்காக கலைஞர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதுக்கு சகலரும் முயற்சிக்க வேண்டும்.
பாரம்பரியங்களை மீண்டும் மக்கள் மத்தியிலே பறைசாற்றுவதுக்கு கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அதன் ஓர் அங்கமாகத்தான் கலை உணர்வு மிக்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவியின் அறிமுகப்படுத்தப்பட்ட 'பௌர்ணமி கலைநிகழ்வு' இப்பொழுது ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும்; மாதாந்தம் இடம்பெற்று வருகின்றது' என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் எஸ். கிரிதரன், மாவட்ட கலாசார இணைப்பாளர் ரீ. மலர்ச் செல்வன்,; கலைஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
46 minute ago
2 hours ago