2025 நவம்பர் 05, புதன்கிழமை

உலக நாடக தின சிறப்பு நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உலக நாடகத்தினத்தினை முன்னிட்டு பேராசிரியர் மௌனகுருவின் அரங்க ஆய்வுக்கூடத்தின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை (27) மாலை பார் வீதியிலுள்ள கூத்து பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அரங்க ஆய்வுக்கூட மாணவர்களினால் உலக நாடக தின பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சி.சீவரத்தினம் உலக நாடக தின சிறப்புரை நிகழ்த்தினார்.
இதன்போது உலக நாடக தினத்தினை சிறப்பிக்கும் வகையில் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மாணவர்களின் அரங்க ஆற்றுகை நிகழ்வுகளும் நடைபெற்றன.

செல்வி நிசாந்தினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருமதி ஜெயரஞ்ஜனி ஞானதாஸ், கலைஞர்கள், பொது மக்கள், மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X