Thipaan / 2015 மார்ச் 31 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 125ஆவது ஆண்டு விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பாடசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
எனது தலைமையில் முகாமைத்துவ குழு, பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இவ் விழா கொண்டாடப்படவுள்ளது.
இதனையொட்டி 125ஆவது ஆண்டுக்குரிய சிறப்பு மலர் வெளியீடும் நடைபெறவுள்ளதால் இப் பாடசாலையுடன் தொடர்புடையவர்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
ஆக்கங்களை வழங்க விரும்புவோர், ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாக பாடசாலையில் மலர் வெளியீட்டுக்கு பொறுப்பானவர்களிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago