Princiya Dixci / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகள், சம்மாந்துறையில் திங்கட்கிழமை (30) நடைபெற்றன.
பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் பிரதம அதிதியாக கலந்தகொண்டு புத்தாண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
பிறக்கவிருக்கும் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை சித்தரிக்கும் வகையில் கலாசார கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததோடு, இன உறவை வளர்க்கும் மூவின மாணவர்களின் விளையாட்டு நிகழ்வும் நடைபெற்றன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் பிரிவின் தலைவர் எம்.ஏ.எம். சமீம், பிரயோக விஞ்ஞான பீட திணைக்களங்களின் தலைவர்களான ஏ. நஸீர் அஹமட், கலாநிதி யூ.எல். செயினுடீன், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.




50 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
3 hours ago
3 hours ago