2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

தமிழியல் விருது -2015

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டு தோறும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கை தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழியல் விருது வழங்கிவருகின்றது.

அந்த வகையில், இந்த ஆண்டும்  (2015) 7ஆவது தடவையாக இந்த விருதை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல்வடிவம் கொண்டுள்ளதாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர், டாக்டர் ஓ.கே.குணநாதன் இன்று புதன்கிழமை (08) அறிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்கான நூல்களை தேர்வுசெய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கை  தமிழ்ப் படைப்பாளிகள் நூலுக்கான தமிழியல் விருதுக்காக நூல்களை அனுப்பிவைக்கலாம்.

நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, தொழில்நுட்பம் எனப்; பல்துறை சார்ந்த நூல்களை தேர்வுக்காக அனுப்பிவைக்கலாம்.

நூல்களின் 3 படிகள் அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.

நூல்கள், 2014 ஜனவரி முதலாம் திகதி  முதல் 2014 டிசெம்பர் 31ஆம் திகதி வரையான  காலப்பகுதிக்குள்  பிரசுரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

முதல் பதிப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

நூல்கள் வந்துசேரவேண்டிய இறுதித் திகதி 31.05.2015 அன்று ஆகும்.

ஒரு படைப்பாளி எத்தனை வகையான படைப்புக்களையும் அனுப்பிவைக்கலாம்.

நூலுடன் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி கொண்ட விவரத்தை  இணைத்து அனுப்புதல் வேண்டும்.

சிறந்த அறிஞர்களைக் கொண்ட நடுவர் குழு விருதுக்குரிய நூல்களையும் விருதாளிகளையும் தேர்வுசெய்யும்.
பணமும் விருதும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்படும்.

நூல்களைஅனுப்பவேண்டிய முகவரி : டாக்டர் ஓ.கே.குணநாதன் மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல: 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.      

வழங்கப்படவுள்ள உயர் தமிழியல் விருது

இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்கு, எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

தமிழியல் விருது

தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு  உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள் 5 பேருக்கு, வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருதுடன், தலா 15,000 ரூபாய் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது

இலங்கை படைப்பாளி அல்லாத அயல் நாட்டு தமிழ்ப் பணியாளர் ஒருவருக்கு, கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருதுடன்,  25,000 ரூபாய்  வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

இனநல்லுறவு தமிழியல் விருது

இன நல்லுறவுக்காக உழைத்த சிங்களமொழி படைப்பாளர் ஒருவருக்கு வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருதுடன,; 10,000 ரூபாய் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

இவற்றை விட சிறந்த நூலுக்கான தமிழியல் விருது வரிசையில்,

2014ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 20 நூல்களுக்கு

சுவாமி விபுலாநந்த அடிகளார் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் ஆலங்கேணி கணபதிப்பிள்ளை செல்லம்மா தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

தகவம் வ.இராசையா தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய்  பணப்பரிசும் பம்பைமடு கந்தையா இரஞ்சிதமலர் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் கவிஞர் எருவில்மூர்த்தி தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் சிவநெறிப் புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் கலைஞர் அழ. அழகரெத்தினம் தமிழியல் விருதுடன்    10,000 ரூபாய் பணப்பரிசும் வைத்தியாச்சாரி மீராசாஹிபு அஹமது தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் திருமலை லூர்து அருளானந்தம் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

ஓவியருக்கான தமிழியல் விருது மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்கு ஓவியர் கிக்கோ தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளதாகவும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர், டாக்டர் ஓ.கே.குணநாதன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X