Kogilavani / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
சிங்கை ஆரம் என்னும் நூல் வெளியீட்டு விழா நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து இந்நூலை வெளியிட்டன.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை தொழிலதிபரான தியாகராசா மோகனதாஸ் பெற்றுக்கொண்டார்.
வரவேற்புரையை உதவி திட்டமிடற்பணிப்பாளர் இ.சுரேந்திரநாதனும் மலர் வெளியீட்டுரையை உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகனும் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டு பிரதேச செயலாளரால் கௌரவிக்கப்பட்டார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago