2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜீவகுமாரனின் மூன்று நூல்களின் அறிமுக விழா

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

யாழ். சங்கானையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவகுமாரனின் மூன்று நூல்களின் அறிமுக விழா, மட்டக்களப்பு நகர மண்டபத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்த நூல்களின் அறிமுக விழா, பேராசிரியர் எஸ். மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட கலைஞர்களே இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கவிஞர் வி. ஐமக்கல் கொலின் நிகழ்த்தினர்.

ஜீவகுமாரனின் மூன்று நூல்களில் 'ஜீவகுமாரனின் கதைகள்' நூலுக்கான விமர்சன உரையை எழுத்தாளர் திருமலை நவமும் 'கடவுச்சீட்டு' நாவலுக்கான விமர்சன உரையை பேராசிரியர் செ. யோகராசாவும் 'ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள்' நூலுக்கான விமர்சன உரையை அ.ச. பாய்வா ஆகியோர் வழங்கினர்.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2011ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் ஜீவகுமாரனின் மொழிபெயர்ப்பு நூலான 'இப்படிக்கு அன்புள்ள அம்மா' நூலுக்கான விருதை அப்போது அவர் சமூகமளிக்காத காரணத்தினால் எழுத்தாளர் ச. அருளானந்தம் ஜீவகுமாருக்கு இதே நிகழ்வில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .