Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
ஓய்வுபெற்ற கிராம நிலதாரிகள் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் அக்கரைப்பற்று வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
இந்நிகழ்வு, ஓய்வுபெற்ற கிராம நிலதாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஐ. உதுமாலெவ்வை தலைமையில் இடம்பெற்றது.
கரையோர கிராம நிலதாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.அஜ்வத் பிரதம அதிதியாகவும் ஓய்வுபெற்ற கிராம நிலதாரிகள் சங்கத்தின் ஆலோசகர் எம்.கந்தப்பன், கரையோர கிராம நிலதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.ஏ.நஜீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் எஸ்.எல்.யாக்கூப் சமாதான நீதிவானாக நியமிக்கப்பட்டதையிட்டு அதிதியினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற கிராம நிலதாரிகள் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு மலரின் முதலாவது பிரதியை பிரதம அதிதியிடமிருந்து சங்கத்தின் ஆலோசகர் எம்.கந்தப்பன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிலதாரிகள் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago