2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

அரசி வன்னி நாச்சியாரின் 465ஆவது ஆண்டு விழா

Thipaan   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கிலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக பனிச்சங்கேணி அரசி வன்னி நாச்சியாரின் 465ஆவது ஆண்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் கோரளப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி, கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில், நினைவுப் பேருரையினை பிரபல எழுத்தாளர் வாகரை வாணன் நிகழ்த்துவார்.

அத்துடன், கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம், பால்சேனை அ.த.க. பாடசாலை, வாகரை மகா வித்தியாலயம், மாங்கேணி றோ.க. கலவன் பாடசாலை, பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம், காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவ மாணவிகளின கிராமிய நடனம், கரகம், இலக்கிய நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .