2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

சங்கீத சபையின் மாதாந்த கலை நிகழ்வு

Kogilavani   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வட இலங்கை சங்கீத சபையின் மாதாந்தக் கலை நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மருதனார்மடத்தில் அமைந்துள்ள வடஇலங்கை சங்கீத சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் நடைபெறவுள்ள இசையரங்கு நிகழ்வில் கலாவித்தகர் திருமதி ஜெ.சிவதர்சிகா பாட்டு, செல்வி பிறிசில்லா ஜோர்ஜ் வயலின், க.கண்ணதாசன் மிருதங்கமும் இசைப்பர்.

இசைக் கச்சேரியில் சங்கீத வித்துவான் எ.கே.கருணாகரன் பாட்டு, அ.ஜெயராமன் வயலின், பிரம்மஸ்ரீ எஸ்.சிவசுந்தரசர்மா மிருதங்கம், கே.செந்தூரன் முகர்சிங், கு.ரவிசங்கர் கடம் வாசிப்பர்.

தொண்டைமானாறு அபினயசுரபி கலாமன்ற மாணவிகளின் நிருத்தியாற்பணம் நிகழ்வில் திருமதி ஞானதர்சினி கிருபாகலன் நட்டுவாங்கம், திருமதி விமலாதேவி ராஜேந்திரன் பாட்டு, கே.செல்வமோகன் மிருதங்கம், திருமதி கலைவாணி புஸ்பராஜன் வயலின், மு.அனல்தர்ஷன் ஒர்கன் இசைப்பர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .