2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

தென்மராட்சி கல்வி வலயத்தின் ஏழிசை மாலை

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஐயவாசன்

தென்மராட்சி கல்வி வலயத்தின் ஏழிசை மாலை நிகழ்வு சாவகச்சேரி நகராட்சிமன்ற பொன்விழா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்றது

தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் கலந்து கொண்டார்.

தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன், யாழ் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கிருபாசக்தி கருணா மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி உதயராணி முனிஸ்வரன், சங்கீத வித்துவான் பொன் ஸ்ரீவாமதேவன், வடமாகாண கல்வித்திணைக்கள அழகியல்பாட ஆசிரிய வளவாளர் திருமதி மதிவதனி விக்னராசா மற்றும் கலாபூசணம் கே.எஸ்.ஆர்.திருஞானசம்பந்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
இந்நிகழ்வில் ஆசிரியை திருமதி புனிதகுமாரி ஈழநேசன், மந்துவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை மாணவன் ஸ்ரீ.நிருஜன், பொன்ஸ்ரீ வாமதேவனின்; மாணவிகளின் குழுப்பாடல் ஆகியன இடம்பெற்றன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .