2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

சித்திரை மாத பொற்றூறல்

Thipaan   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமறைக் கலாமன்றத்தின் பொன்விழாவையொட்டி, மாதாந்தம் இடம்பெற்று வரும் பொற்றூறல் நிகழ்ச்சித் தொடரின் சித்திரை மாத நிகழ்வு கலைத்தூது கலையகத்தில் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன்  கலந்து கொண்டார்.

நல்லை க.கண்ணதாசனின் நெறியாள்கையில் நாதசமர்ப்பணம் என்ற இசை அரங்கு இடம்பெற்றது. ஆதிதாள வாத்தியக் கச்சேரி இடம்பெற்றது. இதில் மிருதங்கம் - நல்லை க.கண்ணதாசன், தவில் - ஆர்.ஆனந்தகணேசன், கடம் - ஞா.வசந், முகர்சிங் - ந.சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரி நடனத்துறை விரிவுரையாளர் பேர்ல்ரஞ்சினி மதியழகனின் நெறியாள்கையில் திருமறைக் கலாமன்ற நடனத்துறை மாணவியர் வழங்கிய நளதமயந்தி என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது.

ஜெயக்குமாரி கந்தவேளின் எழுத்துருவாக்கத்தில் உருவாகிய இந்நாட்டிய நாடகத்தில் நட்டுவாங்கம் - பே.மதியழகன், பாட்டு – திருக்குடும்ப கன்னியர்மட ஆசிரியர் ஜெயகாந்தன், வயலின் - அ.ஜெயராமன், மிருதங்கம் - எஸ்.துரைராஜா, ஓர்கன் - ரஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .