Kogilavani / 2015 மே 08 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தெல்லிப்பளை பிரதேச கலாசார பேரவையின் ஒழுங்குபடுத்தலில் கவிதைப் பயிற்சிப் பட்டறை நிகழ்வு வியாழக்கிழமை (7) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.ஸ்ரீமாகனன் தலைமையில் இடம்பெற்றது.
கவிஞர் சே.பத்மநாதன், கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் ஈழத்தின் முதன்மையான கவிஞருமான கு.ரஜீவன், ஈழத்தின் பிரபல மூத்த கவிஞர் இ.கருணாகரன், பருத்திதுறை பிரதேச செயலாளரும் கவிஞருமான த.ஜெயசீலன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்தினர்.
இந்த பயிற்சிப் பட்டறையானது நாளை 9 ஆம் திகதியும் தொடர்ந்து நடைபெவுள்ளது. ஆர்வமுடைய கலைஞர்கள் இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago